• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவின் 39 வது படத்தின் பெயர் ஜெய் பீம் - பர்ஸ்ட் லுக் வெளியீடு...!

சூர்யாவின் 39 வது படத்தின் பெயர் ஜெய் பீம் - பர்ஸ்ட் லுக் வெளியீடு...!

ஜெய் பீம்

ஜெய் பீம்

சூர்யா தயாரித்து, நடிக்கும் அவரது 39 வது படத்துக்கு ஜெய் பீம் என பெயர் வைத்துள்ளனர். படத்தின்  பர்ஸ்ட் லுக்கில் அவர் வழக்கறிஞர் உடையில் இருக்கிறார்.  ஞானவேல் என்பவர் படத்தை எழுதி இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யாவின் 40 வது படமாக எதற்கும் துணிந்தவன் தயாராகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ஜெய் பீம் என்று பெயர் வைத்துள்ளனர்.

சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டே மேலும் ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்பட்டது. படப்பிடிப்பில் அவர் வழக்கறிஞர் உடையில் இருக்கும் புகைப்படமும் வெளியானது. ஆனால், படம் குறித்த பிற தகவல்கள் தெரியாமல் இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் அவரது 40 வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என பெயரிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் சூர்யாவின் 39 வது படத்தை தயாரிக்கிறது.

Also read... ஜப்பானில் ரஜினியின் தர்பாருக்கு டிமாண்ட் - காட்சிகள் அதிகரிப்பு...!

சூர்யா தயாரித்து, நடிக்கும் அவரது 39 வது படத்துக்கு ஜெய் பீம் என பெயர் வைத்துள்ளனர். படத்தின்  பர்ஸ்ட் லுக்கில் அவர் வழக்கறிஞர் உடையில் இருக்கிறார்ஞானவேல் என்பவர் படத்தை எழுதி இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்

ஜெய் பீம் என்பது அம்பேத்கரை வாழ்த்தி செய்யப்படும் முழக்கம். அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான கோஷம். அதை சூர்யா தனது படத்தின் தலைப்பாக வைத்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: