• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த சூர்யா! நெட்டிசன்கள் விமர்சனம்

விஜய் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த சூர்யா! நெட்டிசன்கள் விமர்சனம்

நடிகராக தான் அறிமுகமாகிய முதல் நான்கு ஆண்டுகளில் தன் பெயர் சொல்லும்படி ஒரு வெற்றியை கூட ருசிக்காத சூர்யா, 2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்தார்.

நடிகராக தான் அறிமுகமாகிய முதல் நான்கு ஆண்டுகளில் தன் பெயர் சொல்லும்படி ஒரு வெற்றியை கூட ருசிக்காத சூர்யா, 2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்தார்.

காப்பான் பட லுக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய்யின் பெற்றோருடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    நடிகர் சூர்யா ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பெரிய அண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    மேலும் விஜய்யுடன் நேருக்கு நேர் ஃபிரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்துள்ளார். அதேவேளையில் இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் காப்பான் பட லுக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

    அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.



    செல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரி...மேடையில் கோபமான கார்த்தி!

    ஆனால் சமீபத்தில் கார்த்தியிடம் செல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரிக்கு மேடையிலேயே அவர் அறிவுரை வழங்கினார். முன்னதாக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனைத் தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

    இந்தசூழலில் நடிகர் சூர்யா, விஜய் பெற்றோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை அனுமதி பெற்று எடுக்கப்பட்ட புகைப்படமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    வீடியோ: நடிகர் சூர்யா நடிப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரப் படம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: