• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அகரம் தான் என் அடையாளம் - நடிகர் சூர்யா

கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அகரம் தான் என் அடையாளம் - நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது தொடர்ந்து வருவதாகவும் நடிகர் சூர்யா ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

    நடிகர் சூர்யாவின் "அகரம் அறக்கட்டளை" துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் பேசிய சூர்யா,... குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன் என்று உறுதியளித்த அவர், சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றார்.

    பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகவும் சூர்யா கூறினார்.

    அறக்கட்டளை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை குறிப்பிட்டு பேசிய சூர்யா, குடும்பத்தைக் காட்டிலும் அகரம் அறக்கட்டளைக்காக அதிக நேரம் செலவழிக்கும் ஜெயஸ்ரீ-யின் குழந்தையை ஆரத்தழுவி கண்கலங்கினார்.

    முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், இன்னும் 100 படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், "அகரம்" தான் சூர்யாவின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: