• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காப்பான் படத்தில் எனது கேரக்டர் இதுதான் - சூர்யா

காப்பான் படத்தில் எனது கேரக்டர் இதுதான் - சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காப்பான் படத்தில் தனது கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா உறுதி செய்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது.

இந்நிலையில், மோகன்லால் மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து உறுதி செய்துள்ளார் சூர்யா. நடிகர் மோகன்லாலின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவருடைய நேர்காணல் லைவ்வாக ஒளிபரப்பானது. அதில், வீடியோ கால் மூலம் சூர்யா பேசினார். அப்போது ‘காப்பான்’ குறித்து ஏதாவது பகிர்ந்து கொள்ளும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சூர்யா, ‘இது ஏற்கெனவே ஊடகங்களில் வெளியான செய்திதான். அதை இப்போது நான் உறுதி செய்கிறேன். மோகன்லால் பிரதமராகவும், நான் அவரைப் பாதுகாக்கும் எஸ்பிஜி (Special Production Group) அதிகாரியாக நானும் நடிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திரைக்கு வரும். ஆனால் படம் வெளியாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சூர்யா கூறியுள்ளார்



காமெடி நடிகை கோவை சரளாவின் சீரியஸ் பேட்டி - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: