முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராணுவ வீரர்களுக்காக நிதி கொடுங்கள்: நடிகர் சூர்யா உருக்கம்

ராணுவ வீரர்களுக்காக நிதி கொடுங்கள்: நடிகர் சூர்யா உருக்கம்

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நம்மால் முடிந்த தொகையை போரில் உயிர்நீத்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

நம்மால் முடிந்த தொகையை போரில் உயிர்நீத்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் வசூலாகும் நிதியைக் கொண்டு போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள் மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படுவது வழக்கம்.

டிசம்பர் 7-ம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்படும் நிலையில் நடிகர் சூர்யா அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அந்த பதிவில், “நாம பாதுகாப்பா தூங்கணும்னா, ராணுவம் விழிப்போட இருக்கணும். நாம குடும்பத்தோட சந்தோஷமா வாழணும்னா, அவங்க குடும்பத்தைப் பிரிஞ்சு வெயில்லயும் மழையிலயும் குளிர்லயும் கஷ்டப்படணும். நாட்டு மக்களோட நிம்மதி, பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே ராணுவ வீரர்களோட தியாகத்துல இருக்கு.

அந்த தியாகத்துக்கு நம்ம நன்றியை, வெறும் வார்த்தையா வெளிப்படுத்துனா பத்தாது. ‘உங்களுக்குப் பிறகு உங்க குடும்பம் என்னாகும்னு நீங்க யோசிக்க வேண்டாம். நாங்க இருக்கோம், நாங்க பார்த்துக்கிறோம்’ங்கிற நம்பிக்கையை ராணுவ வீரர்களுக்குத் தரவேண்டியது நம்ம கடமை.

ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் டிசம்பர் 7 Armed Forces Flag Day, நம்ம நன்றியுணர்வை ராணுவ வீரர்களுக்கு வெளிப்படுத்துகிற நாள். போரால் பாதிக்கப்பட்ட வீரர்கள், போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ ‘கொடிநாள்’ நிதி திரட்டுறாங்க. நம்மால் முடிஞ்ச தொகையை ‘கொடிநாள்’ நிதிக்கு பங்களிப்பாகத் தருவோம். போரால் பாதிக்கப்பட்ட , போரில் உயிர்நீத்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் வீர வணக்கம். ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் நிதி செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

டிக் டொக்கின் போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - வீடியோ

First published:

Tags: Actor Surya