Home /News /entertainment /

சூர்யாவின் அடுத்த மூவ்... 'இன்று நேற்று நாளை' பட இயக்குநருடன் புதிய கூட்டணி...!

சூர்யாவின் அடுத்த மூவ்... 'இன்று நேற்று நாளை' பட இயக்குநருடன் புதிய கூட்டணி...!

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காப்பான் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

    சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து விரைவில் டீசர் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ஹரி ஆகியோரும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த வரிசையில் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமாரும் இணைந்துள்ளார்.

    சூர்யா - ரவிக்குமார் இணையும் இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இன்று நேற்று நாளை படத்தின் வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரவிக்குமார், தற்போது சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யாவுடன் கரம் கோர்த்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி