• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களை சந்திக்கும் சூர்யா.. எங்கே? எப்போது?

ரசிகர்களை சந்திக்கும் சூர்யா.. எங்கே? எப்போது?

நடிகர் சூரியா

நடிகர் சூரியா

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து ட்விட்டரில் இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் பேச உள்ளார். #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேள்விகளை கேட்கலாம்’ என்று பதிவிட்டுள்ளது.



    இந்த பதிவுக்கு நடிகர் சூர்யா காத்திருப்போம் என்று பதிலளித்துள்ளார்



    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: