• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • JaiBhim Twitter Review : நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் ட்விட்டர் விமர்சனம்

JaiBhim Twitter Review : நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் ட்விட்டர் விமர்சனம்

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் ட்விட்டர் விமர்சனம்

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் ட்விட்டர் விமர்சனம்

JaiBhim Twitter Review : நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்து திரைத்துறையினர் மட்டும் அல்லாது இணையவாசிகளும் படம் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

  • Share this:
    நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்திற்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. பலரும் சூர்யாவை பாராட்டி அவரது ட்விட்டர் ஐடிக்கு டேக் செய்து படத்தின் வெற்றி குறித்து பாராட்டி வருகின்றனர்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.





    இருளர் பழங்குடியினருக்கு நேர்ந்த போலீஸ் கொட்டடி கொடுமைகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜெய் பீம். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்த போது நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.





    படத்தை நேற்றுப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படத்தையும், படக்குழுவினரையும், முக்கியமாக சூர்யாவையும் பாராட்டி நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதில், சூர்யா இருளர் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ஒரு கோடி அளித்ததையும் பாராட்டியிருந்தார்.





    இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்து இணையத்தில் பலரும் பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையினர் மட்டும் அல்லாது இணையவாசிகளும் படம் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.









    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் ஜெய் பீம் பார்த்தேன்.கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என ட்வீட் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: