`வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை' - கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சூர்யா

`வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை' - கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சூர்யா

சூர்யா

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர். இந்த நிலையில், தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published:

  சிறந்த கதைகள்