கேரளாவில் கனமழை: சூர்யா, கார்த்தி ₹ 25 லட்சம் நிதியுதவி

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழப்பு; 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

கேரளாவில் கனமழை: சூர்யா, கார்த்தி ₹ 25 லட்சம் நிதியுதவி
கேரளாவில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழப்பு; 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ₹ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டுள்ளன. நேற்று இடுக்கி மாவட்டம் செருதோணி அனையை திறந்துவிட அரசு முடிவெடுத்து திறந்து விட்டதில் சிருதோணி பஸ் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளம் ஆலுவா நகரத்தையும் மூழ்கடித்தது. நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இதனால் பாலக்காடு , மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூபாய் 25 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.
First published: August 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading