Suriya 40: சூர்யா இல்லாமல் தொடங்கிய ஷூட்டிங்

பாண்டிராஜ் - சூர்யா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

  • Share this:
சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் உருவான‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்த சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40-வது படத்தில் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளது.



கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்றிலிருந்து சூர்யா மீண்டு வந்திருப்பதாக தெரிவித்த கார்த்தி தனது அண்ணன் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார் என தெரிவித்திருந்தார். அதனால் தான் அவர் படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என தெரிகிறது.

இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் அந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: