பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் - குஷ்பு மகிழ்ச்சி

பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் - குஷ்பு மகிழ்ச்சி

குஷ்புவுடன் சுப்பு பஞ்சு

நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைந்திருப்பதை பதிவிட்டு நடிகை குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், பாடலாசிரியர் என திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு. சிறு வயதிலேயே டெய்ஸி என்ற மலையாள படத்தில் நடித்திருக்கும் இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் தற்போது பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “எனது நல்ல நண்பர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைந்திருக்கிறார். நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பு. அதைக்குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கும் ராதிகா என்ன ஒரு அரசியல் மூவ் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்ததை அடுத்து
பிக்பாஸ் பிரபலம் மோகன் வைத்யா, தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் ஆகியோர் இணைந்தனர். அவரைத்தொடர்ந்து தற்போது நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.முன்னதாக காயத்ரி ரகுராம், பொன்னம்பலம், நடிகர் ராதாரவி, நமீதா, விஜயகுமார், ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பேரரசு, பிரமிட் நடராஜன், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட பலரும் தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: