• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘விஜய் 63' படத்தில் இணைந்த விஜய்சேதுபதி பட வில்லன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘விஜய் 63' படத்தில் இணைந்த விஜய்சேதுபதி பட வில்லன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்

விஜய்

தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர் விஜய் 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய் 63 படத்தில் புதிதாக மீண்டும் ஒரு நடிகர் இணைந்துள்ளார்.

    தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

    இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேபில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சவுந்தர்ராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், விஜய் 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கும் சவுந்தர்ராஜா, அட்லீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    முன்னதாக இவர் தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

    மார்கெட் சரிவின் போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஹீரோயின்கள் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: