முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறன் - சூரியின் விடுதலை!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறன் - சூரியின் விடுதலை!

Viduthalai

Viduthalai

Soori | 'விடுதலை' படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடிக்க, சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சூரி 1999ஆம் ஆண்டு வெளியான 'நினைவிருக்கும் வரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் 2009லஆம் ஆண்டு வெளிவந்த 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் இடம்பெற்ற பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் பரோட்டா போட்டியில் கலந்துகொண்ட சீன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இவர் அதன் பின்னர் 'பரோட்டா' சூரி என்று அழைக்கப்படுகிறார். இதன் பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்த சூரி சிவகார்த்திக்கேயனுடன் நடித்திருந்த 'சீமராஜா' திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துகொண்டிருக்கும் 'விடுதலை' திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தின் முக்கால்வாசிக்கும் அதிகமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது இரண்டு வாரங்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடிக்க, சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முந்தைய படங்களைப் போலவே, இப்படமும் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் நகர்த்தி, திரில்லர் தருணங்களுடன் வலுவான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சியிருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Also Read : விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

எல்ட்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டும் இத்திரைப்படம் மற்ற இந்திய மொழிகளிலும், தமிழில் ஒரே நேரத்தில் இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் பணியாற்றுகிறார். இவர் வெற்றிமாறனின் முந்தைய படங்களுக்கும் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Soori, Director vetrimaran, Entertainment, Vijaysethupathi