சிக்ஸ் பேக்கில் பரோட்டா சூரி! சிவகார்த்திகேயன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்

news18
Updated: September 12, 2018, 7:07 PM IST
சிக்ஸ் பேக்கில் பரோட்டா சூரி! சிவகார்த்திகேயன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்
நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயன்
news18
Updated: September 12, 2018, 7:07 PM IST
பிரபல காமெடி நடிகர் சூரி, சிக்ஸ்பேக்கில் கலக்கும் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

1999-ம் ஆண்டு நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகர் சூரி. அதற்கு பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது.

சிவகார்த்திகேயன்-சூரி காம்போவில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக இணைந்தார் சூரி.

சினிமா ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்து இன்று அனைவரும் அறிந்த முகமாக மாறியிருக்கும் நடிகர் சூரி, தனது அடுத்த பரிணாமத்தை தொடங்கியுள்ளார்.

இவர் நடித்த சீமராஜா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சூரி நடிகர் சூர்யா போல் சிக்ஸ்பேக் வைத்து மாறியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் 8 மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்ததாகவும், இந்த புகைப்படத்தை பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்