நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீரதீரசூரன்' என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார்.
இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கித் தருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.
அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிடம் மாற்றக் கோரியும் நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடையாறு போலீசார் முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். நடிகர் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நில மோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கூறினார்.
அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.