கஜா புயல் பாதித்த பகுதியிலேயே தங்கி உதவி செய்து வரும் நடிகர் சூரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற பிரபல காமெடி நடிகர் சூரி, அந்த பகுதியின் அரசு பள்ளியிலேயே தங்கி உதவி செய்துள்ளார். இதுகுறித்து கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
புயல் பாதிப்பு பகுதியைச் சேர்ந்த மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்றறிய, மக்களோடு மக்களாக அரசுப் பள்ளியில் தங்கிய நடிகர் சூரி.
கொசுக்கடி, குளிர் பாராமல் தஞ்சை மாவட்டம், செருவாவிடுதி அரசுப் பள்ளியில் இரவு முழுக்க தங்கி, மக்களுக்கு நம்பிக்கை வார்த்த சூரி அண்ணனுக்கு நன்றி! pic.twitter.com/ilyJ3UWhkc
அதில், “புயல் பாதிப்பு பகுதியைச் சேர்ந்த மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்றறிய, மக்களோடு மக்களாக அரசுப் பள்ளியில் தங்கிய நடிகர் சூரி. கொசுக்கடி, குளிர் பாராமல் தஞ்சை மாவட்டம், செருவாவிடுதி அரசுப் பள்ளியில் இரவு முழுக்க தங்கி, மக்களுக்கு நம்பிக்கை வார்த்த சூரி அண்ணனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
கஜா புயல்: அதிமுக சார்பாக 100 டன் அரிசியை அனுப்பி வைத்த முதல்வர் - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.