Home /News /entertainment /

மீனா வீட்டை நான் வாங்கினேனா...? நடிகர் சூரி விளக்கம்

மீனா வீட்டை நான் வாங்கினேனா...? நடிகர் சூரி விளக்கம்

நடிகை மீனா | சூரி

நடிகை மீனா | சூரி

மீனா வீட்டை நடிகர் சூரி வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் பரோட்டா சூரி. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் காமெடிக் கூட்டணி அமைத்த நடிகர் சூரிக்கு ஏறுமுகம் தான்.

தனது நகைச்சுவையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகர் சூரியின் மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே போன நிலையில் சமீபத்தில் மதுரையில் அய்யன், அம்மன் என்ற ஹோட்டல்களை திறந்துள்ளார் நடிகர் சூரி.

நம்மவீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அண்ணனாக நடித்திருந்த சூரியின் ஹோட்டலை சிவகார்த்திகேயன் திறந்து வைக்க, விஜய் சேதுபதி அந்த ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.



திரைத்துறையில் பிஸியாக வலம் வந்தாலும் பிசினஸ் பக்கமும் ஆர்வம் காட்டி வரும் சூரி, தற்போது நடிகை மீனாவின் வீட்டை ஒரு பெரும் தொகைக்கு விலைக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க: சூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன்? - வெற்றிமாறன் பதில்

இந்நிலையில் இதுகுறித்து சூரி தரப்பில் நாம் விசாரித்த போது, அது வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மையில்லை என்று கூறப்பட்டது. தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Soori

அடுத்த செய்தி