• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தளபதியின் திரைத்துறை தம்பி - எஸ்.ஜே.சூர்யா சொன்னது யாரைத் தெரியுமா?

தளபதியின் திரைத்துறை தம்பி - எஸ்.ஜே.சூர்யா சொன்னது யாரைத் தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

  • Share this:
தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.

இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகர் அவதாரமெடுத்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியைக் கொடுத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து இரவாக் காலம், உயர்ந்த மனிதன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் ராதமோகன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை நாளை காலை 11 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்க பதிவில் எஸ்.ஜே.சூர்யா கூறியிருப்பதாவது, இந்தப் படத்தின் போஸ்டரை யார் வெளியிடுவார்கள் என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் அமிதாப் பச்சன் என்றும், ஒரு சிலர் ரஜினிகாந்த் என்றும், ஒரு சிலர் விஜய் என்றும், சிலர் தனுஷ் என்றும் கூறியிருந்தனர்.

எஸ்.ஜே.சூர்யா


ஆனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இருப்பவர் அமிதாப் பச்சனின் சக நடிகரும், ரஜினியின் மருமகனும், தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான அசுரன் தனுஷ் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளார்” என்று கூறியுள்ளார்.



தளபதியின் திரைத்துறை தம்பி என்ற புதிய பட்டத்தை தனுஷூக்கு எஸ்.ஜே.சூர்யா வழங்கியதை தனுஷ் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: ‘வலிமை' படத்தில் இணைந்த புதிய இயக்குநர்... வில்லனாக நடிக்கிறாரா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: