ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகரின் மகனுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. என்ன விஷயம் தெரியுமா.?

நடிகரின் மகனுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. என்ன விஷயம் தெரியுமா.?

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan | அருண் விஜய் மகன் அர்னவ் விஜய்க்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.!

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  1995ஆம் ஆண்டு வெளியான 'முறை மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அருண் விஜய் அதன் பிறகு பிரியம், கங்கா கவுரி, பாண்டவர் பூமி, இயற்கை, தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

  2015 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் பிரபல நடிகர் அஜித்திற்கு வில்லனாக 'என்னை அறிந்தால்' படத்தில் இவர் நடித்திருந்த விக்டர் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அருண் விஜய்க்கு நிறைய படவாய்ப்புகள் குவிய தொடங்கின. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் ஆகிய படங்கள் திரையில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் யானை, அக்னி சிறகுகள், பார்டர், சினம், ஆகிய படங்கள் உள்ளன.

  அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்னவ் விஜய் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

  நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சண்முகம் இயக்கியுள்ள 'ஓ மை டாக்' படத்தில் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், மஹிமா நம்பியார், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்னவிற்கு தந்தையாக இதில் அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்பு தான் இப்படத்தின் கதைக்களம். இப்படமானது அமேசான் தளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  இப்படத்தைப் பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read : கிளாமரில் கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்..

  இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்னவ் விஜயை வாழ்த்துமாறு அவரது புகைப்படத்துடன் 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்.. 🤗 லவ் யூ லோட்ஸ்..❤️ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்..' என தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் அருண் விஜய். இந்த பதிவில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ரசிகர்கள் அர்னவ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இந்த பதிவை ரிட்வீட் செய்துள்ள சிவகார்த்திகேயன் 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி ❤️ஓ மை டாக்கில் உங்கள் நடிப்பை ரசித்து பார்த்தேன்.. நடிப்பை தொடருங்கள், உங்கள் படிப்பு மற்றும் நடிப்பு வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் 👏👏👍🤗' என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Actor Arun Vijay, Entertainment, Sivakarthikeyan