மதுரையில் நகைச்சுவை நடிகர் சூரியின் ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்துவைத்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் 6-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மன் உணவகத்தை திறந்து வைத்தார்.
உணவகத்தைத் திறந்தது வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், நடிகர் சூரி அவர்களுடைய நிகழ்ச்சி என்பதை தாண்டி இது என்னுடைய நிகழ்ச்சி என்றே நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் சூரி அவர்கள் உணவகத்தை திறந்து வைப்பதில் சந்தோஷம் அடைகிறேன். மதுரைக்கு ஒவ்வொரு முறையும் வரும்பொழுதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது எனக்கு புது உத்வேகத்தை தருகிறது இந்த முறையும் அது கிடைத்துள்ளது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
அவரைத் தொரந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி பேசுகையில் தம்பி சிவகார்த்திகேயன் என் குடும்பத்தில் ஒருவர். எங்களுடைய முதல் கிளையிலிருந்து அனைத்து கிளையையும் சிவகார்த்திகேயன் அவர்களே திறந்து வைத்தார். மக்கள் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த கிளைகள் திறக்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் முதல் உணவகத்தை திறந்து வைக்கும் பொழுது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உழைத்து அடுத்தடுத்த கிளைகள் திறக்க வேண்டுமென கூறினார். அதன்படி அடுத்தடுத்து கிளைகள் திறக்க முடிந்தது.
மதுரை என்றாலே அசைவ உணவு தான் என்று சிவகார்த்தியன் கூறினார். மதுரையில் அனைத்தும் சைவ உணவகம் திறக்கிறீர்கள் அடுத்து திறக்கும் உணவகம் அசைவ உணவகமாக இருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறினார். அதனடிப்படையிலேயே தற்போது அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது என நடிகர் சூரி கூறினார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.