• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sivakarthikeyan: அடேங்கப்பா! இரு மொழிகளில் நடிக்க 25 கோடி சம்பளமா.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்

Sivakarthikeyan: அடேங்கப்பா! இரு மொழிகளில் நடிக்க 25 கோடி சம்பளமா.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கு அவருக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

  • Share this:
    சிவகார்த்திகேயன் படங்களுக்கு தமிழில் 50 கோடிகள் திரையரங்கு வர்த்தகம் உள்ளது. தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிநாடு மற்றும் ஆடியோ உரிமைகள் தனி. தமிழ்ப் படத்தை தெலுங்கிலும் சேர்த்து தயாரித்தால்..? இப்படியொரு கணக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்துக்கு தோன்றியுள்ளது. இவர்கள்தான் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். அது தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் பான் - இந்தியன் திரைப்படமாக தயாராகிறது. அவர்களே சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தை தயாரிக்கின்றனர். 

    இந்தப் படத்தை தெலுங்குப்பட இயக்குனர் கே.வி.அனூப் இயக்குகிறார். இவர் கடைசியாக இயக்கிய படம் ஜதி ரத்னலு. நவீன் பொலிஷெட்டி, ப்ரியதர்ஷி நடித்த இந்த காமெடி என்டர்டெயினர் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சின்ன கல்லு பெத்த லாபம் என்பார்களே, அப்படியொரு வெற்றி. சின்ன முதலீடு பெரிய லாபம். குக்கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்காக சிட்டிக்கு வருவதுதான் கதை. நாயகனின் தந்தை ஊரில் பெண்களுக்கென பிரத்யேகமான துணிக்கடை கம் டெய்லரிங் கடை வைத்திருப்பவர். நாயகனும் அங்குதான் வேலை செய்திருப்பான். நகரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, காதலை சிரிக்கச் சிரிக்க எடுத்திருந்தார் அனூப். அவர்தான் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்குப் படத்தை இயக்குகிறார்.

    Also Read : கருங்காப்பியம்-சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையில் காஜல் அகர்வால்..

    இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 25 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது. 15 கோடிகள் வாங்கிக் கொண்டிருந்தவர் இரு மொழிப் படம் என்பதால் ஒரே தாவலில் 25 கோடிகளை எட்டியுள்ளார். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கயிருக்கும் இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படங்கள் அதிகளவில் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: