சந்திரமுகி 2 படத்தில் நடிக்கிறேனா? சிம்ரன் விளக்கம்
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகை சிம்ரன்
- News18 Tamil
- Last Updated: June 2, 2020, 1:19 PM IST
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும், ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் இயக்குநர் பி.வாசு தகவல் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் இந்தப் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை கேட்டறிந்து பின்னர் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும், ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் இயக்குநர் பி.வாசு தகவல் தெரிவித்துள்ளார்.