இன்ஸ்டாவில் கியூட் வீடியோ பதிவிட்ட சிம்பு..குவியும் லைக்ஸ்கள்!

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தனது தங்கை மகனுடன் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் பார்த்த சிம்பு போல் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஃபிட்டாக தோற்றமளிக்கிறார்.

  சிம்பு நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது  மாநாடு மற்றும் பத்து தல படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார்.மேலும் சில நாட்களுக்கு முன்பு சொந்த யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சிம்பு தொடங்கினார்.இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது தங்கை மகனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

     இந்நிலையில் சிம்பு ஒரு புது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் சிம்புவின் தங்கை மகன் சிம்புவுக்கு கிஃப்ட் ஒன்றை கொடுக்க,அதை சிம்பு வாங்கிக்கொண்டு அவனை கட்டி அனைத்து முத்தம் கொடுக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: