இறந்த பிறகு 8-12 வாரங்களுக்குள் தடுப்பூசியின் 2வது டோஸை பெற முடியுமா? நடிகர் சித்தார்த் கேள்வி!

நடிகர் சித்தார்த்

தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் தற்போது நடிகர் சித்தார்த் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல நடிகர் சித்தார்த் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம் என பல கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார் சித்தார்த். இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் தற்போது நடிகர் சித்தார்த் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற முடியாத நிலை குறித்து சுட்டிக்காட்டும் வகையில் நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாடு திணறி வருவதற்கு மத்திய அரசின் அலட்சியமும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதனிடையே இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதால் பல மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை பெற வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், இறந்து 8-12 வாரங்களுக்குப் பிறகு மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெறுவார்களா? என்று மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசுக்கு எதிரான நடிகர் சித்தார்த்தின் ட்வீட், வழக்கம் போல பாஜக ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த்தின் இந்த ட்வீட் பல நேர்மறை மற்றும் எதிர்வினைகளை சமூக ஊடகத்தில் பெற்று வருகிறது.இந்தியாவில் ஜனவரி துவக்கத்தில் தொடங்கிய கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. திடீரென தாக்கிய இரண்டாம் அலையில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையால் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொய்வை சந்தித்துள்ளது தொற்று நோய் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் 18-45 வயதுடைய குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன.

Also read... ’Be Happy’ நோயாளிகளுக்கு சிறுவனின் ஆறுதல் வார்த்தைகள் - வைரலாகும் புகைப்படம்!

சமீபத்திய அறிக்கையின் படி கடந்த 5 மாதங்களில் சுமார் 28.9 மில்லியன் இந்தியர்கள் மட்டுமே தடுப்பூசியின் 2 டோஸ்களையும் முழுமையாக பெற்றுள்ளனர். சுமார் 200 மில்லியன் மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் சித்தார்த் எழுப்பியுள்ள கேள்விக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: