Home /News /entertainment /

சாய்னா குறித்த ட்விட்: போலீஸ் விசாரணையில் மன்னிப்புக் கோரிய நடிகர் சித்தார்த்

சாய்னா குறித்த ட்விட்: போலீஸ் விசாரணையில் மன்னிப்புக் கோரிய நடிகர் சித்தார்த்

சாய்னா - சித்தார்த்

சாய்னா - சித்தார்த்

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரைஅவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

    பேட்மிட்டன் வீராங்கனை சான்யா குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் செய்ததற்காக சென்னை போலீசாரின் விசாரணையின் போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.

    பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெவால் மற்றும் பிரபல பெண் ஊடகவியலாளர் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்த நடிகர் சித்தார்திடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் சென்னை போலீசாருக்கு புகார் அளித்து இருந்தனர்.

    இதுதொடர்பாக கடந்த மாதம் 10 ம் தேதி சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரைஅவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்பதாக தன்னுடைய வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: உள்ளே வலிக்கும் வலி உங்களுக்கு தெரியாது..வைரலாகும் சிம்புவின் வீடியோ


    முன்னதாக சமூக வலைதளத்தில் தான் பதிவிட்ட கருத்துக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் சித்தார்த்துடன் ட்விட்டரில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.இரண்டு புகார்கள் தொடர்பாகவும் நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி