• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித்தை மதித்தால்... ரசிகருக்கு சித்தார்த் அட்வைஸ்

அஜித்தை மதித்தால்... ரசிகருக்கு சித்தார்த் அட்வைஸ்

சித்தார்த் | அஜித்

சித்தார்த் | அஜித்

  • News18
  • Last Updated :
  • Share this:
சமூகவலைதளத்தில் தன்னிடம் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு அஜித்தின் கடின உழைப்பை குறிப்பிட்டு பதிலளித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

12-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த், “என்ன ஒரு இறுதி ஆட்டம். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு இறுதிப் போட்டியும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது. இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி” என்று கூறியிருந்தார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து பதிவிட்ட சித்தார்த், “உண்மையிலேயே ரோகித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டன். தனது அணி எப்படி விளையாடினாலும் அவர் தனது திறமையை நிரூபிப்பார். ஒரு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா ஒரு லெஜண்ட். வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அஜித் ரசிகர் ஒருவர் சித்தார்த்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சித்தார்த், “நீ அஜித்தை மதிக்கிறாய் என்றால், கடின உழைப்பையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவரை ரோல் மாடலாக வைத்திருப்பதில் பயனில்லை” என்று கூறியுள்ளார்.



தன்னம்பிக்கையின் ‘தல’அஜித் - ஸ்பெஷல் வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: