ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிபிராஜுடன் கைகோர்த்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்!

சிபிராஜுடன் கைகோர்த்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்!

வால்டர்

வால்டர்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து வரும் படம் 'வால்டர்'.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் சிபிராஜ் நடிக்கும் வால்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து வரும் படம் 'வால்டர்'. சிபிராஜ் ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நடித்த ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சமுத்திரக்கனி, கவுதம் மேனன் ஆகியோருடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

Also watch

First published:

Tags: Director samuthrakani, Goutham menon