ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'நல்ல நண்பனை இழந்துவிட்டேன்' - உயிரிழந்த உதவி இயக்குநர்.. உருக்கமாக பதிவிட்ட சாந்தனு!

'நல்ல நண்பனை இழந்துவிட்டேன்' - உயிரிழந்த உதவி இயக்குநர்.. உருக்கமாக பதிவிட்ட சாந்தனு!

ஷாந்தனு

ஷாந்தனு

துணை இயக்குநர் உயிரிழந்தது குறித்து நடிகர் சாந்தனு உருக்கமாக பதிவிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனது உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் சாந்தனு. சாத்தூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(25). இவர் சென்னையில் சினிமா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு வருடமாக நெசப்பாக்கத்தில் தங்கி, சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தவரை, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர்.வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்தபோது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது என்றும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும், தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும்வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்தும் வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


First published:

Tags: Tamil Cinema