செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்

செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்

நடிகர் செந்தில்

நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

  • Share this:
1980, 90-களில் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென ரசிகர் கூட்டம் உருவாகி அது இன்று வரை தொடர்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் இக்கூட்டணி செய்த வாழைப்பழ காமெடிக்கு சிரிக்காத ஆளில்லை என்று சொல்லலாம். செந்தில் உடன் நகைச்சுவை செய்தாலும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் கவுண்டமணி.

இந்நிலையில் முதல்முறையாக நடிகர் செந்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத்ராம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஆயுள் தண்டனை முடிந்து ஊர் திரும்பும் நபராக செந்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள செந்திலுக்கு தற்போது அவருடைய எழுபதாவது வயதில் 250 படங்களுக்கு மேல் நடித்த பிறகு ஹீரோ கதாபாத்திரம் தேடி வந்துள்ளது.

மேலும் படிக்க: கணவருடன் நடிகை சாந்தினி வெளியிட்ட முதல் வீடியோ

நடிப்பு மட்டுமல்லாது அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட செந்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வருகிறார் செந்தில்.
Published by:Sheik Hanifah
First published: