Home /News /entertainment /

’காப்பான்’ புகைப்படத்தோடு ஆர்யா - சாயிஷாவை கிண்டலடித்த சதீஷ்...!

’காப்பான்’ புகைப்படத்தோடு ஆர்யா - சாயிஷாவை கிண்டலடித்த சதீஷ்...!

காப்பான் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்

காப்பான் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காப்பான் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தைப் பதிவிட்டு ஆர்யா - சாயிஷாவை கிண்டலடித்துள்ளார் நடிகர் சதீஷ்.

    அயன், மாற்றான் படங்களை அடுத்து கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் காப்பான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் சாயிஷா, ஆர்யா, உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான காப்பான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில் காப்பான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ். அதில் சாயிஷாவிடம் காதலைச் சொல்வதைப் போல் சாயிஷாவின் கரம்பிடித்திருக்கிறார் ஆர்யா.

    இதை தூரத்திலிருந்து பார்க்கும் சூர்யா. இது ஸ்கிரிப்டில் இல்லையே என்று சொல்வதாக அவரது மைண்ட் வாய்ஸை ட்வீட்டியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.



    வீடியோ பார்க்க: கமல் சம்மதித்தால் தேவர் மகன் 2ம் பாகத்தை இயக்குவேன் - சேரன்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Sathish, Kaappaan

    அடுத்த செய்தி