• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காவல்துறையுடன் களத்தில் இறங்கி தன்னார்வலராக பணியாற்றிய சசிகுமார்..!

காவல்துறையுடன் களத்தில் இறங்கி தன்னார்வலராக பணியாற்றிய சசிகுமார்..!

Youtube Video

மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் சசிகுமார் போலீஸ் உடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியுள்ளார்.

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மதியம் 1 மணி வரை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் களத்தில் இறங்கிய நடிகர் சசிகுமார் போலீஸ் உடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றி ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மதுரை போலீஸ் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு வீடியோவில், நாம் நலமாக இருக்க காவல்துறையினர் உள்ளிட்டோர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார்.

    மேலும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: