’பருத்தி வீரன்’ புகழ் நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல்

நடிகர் சரவணன்

பருத்தி வீரன் புகழ் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் நடிகர் சரவணன். இவர் பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 6-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. பின்பு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சலின் முதல்கட்ட பாதிப்பான புளூ காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்து சிகிச்சை பெற உள்ளேன். குணமடைந்த பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன் என்றார்.

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதித்த 12 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Watch :


Also Watch : BMW காரில் படமெடுத்து ஆடிய 5 அடி நீள நாகப்பாம்பு - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: