சரத்குமாருக்கு கொரோனா பாசிடிவ்... மகள் வரலக்‌ஷ்மியின் உருக்கமான பதிவு

சரத்குமாருக்கு கொரோனா பாசிடிவ்... மகள் வரலக்‌ஷ்மியின் உருக்கமான பதிவு

நடிகர் சரத்குமார்

தற்போது அவர் ஹைதராபாத்தில் சிறந்த மருத்துவர்களின் கண்கானிப்பில் இருக்கிறார்.

 • Share this:
  நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலக்‌ஷ்மி சரத்குமார் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துகொண்டார். அந்த பதிவில் தன் தந்தை சரத்குமாருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பது இன்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில் அப்பா சரத்குமாருக்கு  இன்று கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. தற்போது அவர் ஹைதராபாத்தில் உடல்நலனை பார்த்து வருகிறார். ஆரோக்கியமான நிலையில் இருக்கிறார். தொடர்ந்து பதிவுகளை வெளியிடுகிறேன்.. நன்றி என கூறி நடிகை ராதிகாவையும் டேக் செய்துள்ளார்.  இதை தொடர்ந்து ராதிகா சரத்குமாரும் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சரத்குமாருக்கு அறிகுறிகளற்ற கொரோனா பாசிடிவ் காட்டியுள்ளது. தற்போது அவர் ஹைதராபாத்தில் சிறந்த மருத்துவர்களின் கண்கானிப்பில் இருக்கிறார். அவருடைய உடல் நலன் குறித்து அடுத்தடுத்து பதிவிடுகிறேன் என கூறியுள்ளார்.  சரத்குமார் தற்போது மணி ரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் மற்றும் அடங்காதே ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடித்து வெளிவந்த படம் வானம் கொட்டட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sivaranjani E
  First published: