விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய அளவிலான அறிமுகமே தேவை இல்லை. அதிகமாக டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட குக்கு வித் கோமாளி ஷோ பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். அந்த அளவிற்கு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமான சீசன் 1 மற்றும் சீசன் 2-வை தொடர்ந்து தற்போது சீசன் 3-யில் வந்து நிற்கிறது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளியாக ஒரு தூணாக கருதப்பட்ட புகழ், திரைப்பட வாய்ப்புகள் காரணமாக சீசன் 3-இல் கலந்து கொள்ளவில்லை என்பதால் சீசன் 3 கொஞ்சம் மொக்கையாகத்தான் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேபிஒய் பாலா (வெட்டுக்கிளி பாலா) தன் அசாதாரணமான பன்ச் மற்றும் கவுன்டர் டயலாக்கால் புகழையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றே கூறலாம்.
பாலாவை தவிர்த்து சிவாங்கி கிருஷ்ணகுமார், சுனிதா கோகோய் மற்றும் மணிமேகலை போன்றவர்களும் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருக்க, நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயப்பட்ட பிரபலங்களான திரைப்பட நகைச்சுவை நடிகை வித்யுல்லேகா ராமன், பாரதி கண்ணம்மா புகழ் சீரியல் நடிகை ரோஷினி ஹரிபிரியன், நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன், திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ் கருணாஸ், நடிகை அம்மு அபிராமி மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் போன்றவர்கள் போட்டியாளர்களாகவும் அசத்தி வருகின்றனர்.
அழகான பெண் போட்டியாளர்களை பார்த்து ஜொள்ளு விட்டு, அவர்களை சுற்றியே காமெடி ட்ராக் ரெடி செய்து கமெண்ட் அடித்து கலக்கிய புகழின் ஸ்டைலை இம்முறை - சற்றே வித்தியாசமாக - சுனிதா பயன்படுத்தினார். சீசன் 3-யின் போட்டியாளர்களிலேயே மிகவும் 'யங் அண்ட் ஃபிட்' ஆன சந்தோஷ் பிரதாப் மீது "தனக்கு ஒரு கண்ணு இருப்பதாக" கூறி அவரை கவர ஏதேதோ விஷயங்களை செய்தார்.
Also Read : கதறி அழுத யாஷிகா ஆனந்த்... ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ
அண்மையில் குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் பிரதாப் பேட்டி ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த பேட்டியில் "ரோஷினி அல்லது சுனிதா இதில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சந்தோஷ் பிரதாப் சுனிதாவின் பெயரை கூறி உள்ளார். "சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன்" என்று தன் தேர்விற்கான விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.
Also Read : ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை
நினைவூட்டும் வண்ணம், சார்பட்டா பரம்பரை திரைப்படம் வழியாகவே பெரிதும் பிரபலம் அடைந்திருந்தாலும் கூட நடிகர் சந்தோஷ் பிரதாப், ஆர். பார்த்தீபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற திரைப்படம் வழியாகவே அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள பிசாசு 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.