Home /News /entertainment /

நடிகர் சந்தானம் திரைப்பட விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

நடிகர் சந்தானம் திரைப்பட விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

சபாபதி

சபாபதி

போராளிகளை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

    சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சபாபதி வெளிவருமா, குறைந்தபட்சம் ஓடிடி வெளியீடாவது இருக்குமா என்று ஐயப்பட்ட நிலையில் படத்தின் விநியோக உரிமையை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் வாங்கியது. அத்துடன் நவம்பர் 19 படம் திரையரங்கில் வெளியாவதாக அறிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில், 'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, இந்த போஸ்டர் ஹாலிவுட் படமான ரோல் மாடல்ஸ் திரைப்படத்தின் காப்பி என்று சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

    அந்தவகையில், போராளிகளை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சந்தானம் நடித்து திரையரங்கிற்கு வரவுள்ள சபாபதி என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் "தண்ணீர் திறந்துவிட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக" என்ற வாசகம் இருக்கின்றது. அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சி்ப்படுத்தி இருக்கின்றார்கள்.

    நகைச்சுவை என்ற பெயரில் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களை, போராட்டக்காரர்களை இழிவுபடுத்தி இருக்கின்றனர். நகைச்சுவை என்ற பெயரில் மனிதநேயமற்ற காட்சிகளை வைத்து திரைப்படம் ஆக்குவதை கடுமையாக கண்டிக்கின்றோம். உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். வெளியிட்டிருக்கின்ற படங்களை (stills) திரும்பப் பெற வேண்டும்.

    இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு அந்த திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Santhanam, News On Instagram

    அடுத்த செய்தி