சந்தானம் பிறந்தநாளில் வெளியான ‘சபாபதி’ ஃபர்ஸ்ட் லுக்

சந்தானம் பிறந்தநாளில் வெளியான ‘சபாபதி’ ஃபர்ஸ்ட் லுக்

சந்தானம்

சந்தானம் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் ஒரு கட்டத்துக்குப் பின் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தார். சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன.

கடந்த ஆண்டு ஜான்சன்.கே இயக்கத்தில் வெளியான ‘ஏ1’படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவருடன் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் கூட்டணி அமைத்தார் சந்தானம். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவாளராகவும், பிரகாஷ் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று சந்தானத்தின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதேபோல் அறிமுக இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்கே என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. தந்தை - மகன் உறவை மையப்படுத்திய இத்திரைப்படத்தில் சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: