மறைந்த நடிகரும் தோல் மருத்துவருமான சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் உடலைச் சுமந்து சென்று சந்தானம் இறுதி மரியாதை செய்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். 36 வயதாகும் இவர் தோல் மருத்துவரும் கூட. தொடர்ந்து சக்க போடு போடு ராஜா, வாலிப ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சேதுராமனுக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஒரு மனைவியும் மகளும் உள்ளனர்.
இளம் வயதில் சேதுராமன் மரணமடைந்த நிலையில் திரையுலகம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீருடன் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களிலும் இணையத்திலும் காணக்கிடைக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.