திருமணம் செய்ய இத்தாலி பறந்தது தீபிகா - ரன்வீர் சிங் ஜோடி

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்

பாலிவுட்டின் நடிகர்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடிக்கு இத்தாலியில் அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும், சனிக்கிழமை காலை இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகளும், கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவருமான தீபிகா படுகோனே, 2007-ல் ஷாருக்கானின், ஓம் ஷாந்தி ஓம் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால்பதித்தார்.

பாலிவுட்டுக்கு தெற்கிலிருந்து சென்று வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாட்டின் ஹேமமாலினி, ஸ்ரீதேவி வரிசையில், பெங்களூரில் இருந்து சென்ற தீபிகா முதலிடத்தைப் பிடித்தார். மேலும் 2013-ல், ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்கோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்த தீபிகா, தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் என வரலாற்று இதிகாச பின்னணியுடைய காதல் ரசம் சொட்டும் திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். ரீல் வாழ்க்கையில் காதலித்து வந்த அவர்கள் ரியல் வாழ்விலும் காதலில் விழுந்தனர்.இருவரது நெருக்கம் கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், அக்டோபரில் தங்கள் திருமணம் என தீபிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மணமுடித்த அதே இத்தாலி நாட்டில் நவம்பர் 14, 15 தேதிகளில், மணமுடிக்கப்போவதாக தீபிகா தெரிவித்தார்.மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திருமணம், தீபிகாவுக்கு மிகப்பிடித்த இத்தாலியில் அமைந்துள்ள உலகின் மிக அழகிய இடங்களில் ஒன்றான லேக் கோமோவில் நடைபெறவுள்ளது. பனிபடர் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் இத்தாலியின் மிகப்பெரிய ஏரியும், கோத்திக் கட்டடக்கலையில் உருவான வண்ண வண்ண பழங்காலத்தைய கட்டடங்களும் நிறைந்த ரம்மியமான இடத்தில் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. மேலும் இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக, மும்பையில் இருந்து இருவரும் சனிக்கிழமை அதிகாலை, அவரவர்  குடும்பத்தினருடன் தனித்தனியாக புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சொல்லி வைத்ததுபோல், வெள்ளை நிறத்திலான டிசைனர் உடையை அணிந்திருந்தனர்.
தர்மேந்திரா- ஹேமமாலினி, அமிதாப் - ஜெயபாதுரி, ரிஷி கபூர் - நீத்து சிங் வரிசையில், இந்த பாலிவுட் ஜோடியும் இணைபிரியாமல் இல்லற வாழ்வில் இணைந்திருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Also see...

Published by:Vaijayanthi S
First published: