மாயாவதி குறித்து ஆபாச பேச்சு - தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர்!

ரன்தீப் ஹூடா

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இயங்கும் புலம்பெயர் வனவிலங்குகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரன்தீப் ஹூடா நீக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குறித்து ஆபாச ஜோக் கூறிய நடிகர் ரன்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2001 இல் இந்தியில் வெளியான மூன்Nன் வெட்டிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. 2005 இல் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் உருவான டி திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். சல்மான் கானின் சுல்தான், தற்போது வெளியான ராதே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படமான எக்ஸ்ட்ராக்ஷனிலும் ரன்தீப் ஹூடா நடித்திருந்தார். இந்த வருடம் ஓடிடியில் அதிகம் பேர் பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஆபாச ஜோக் கூறியிருந்தார் ரன்தீப் ஹூடா. 2012 இல் இது நடந்தது. இந்த வீடியோ சில தினங்கள் முன்பு இணையத்தில் வைரலானது. முன்னாள் முதல்வர் குறித்த இந்த ஆபாச ஜோக்குக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சாதிய துவேஷம் ரன்தீப் ஹுடாவின் பேச்சில் இருப்பதாக குற்றஞ்சாட்டினர். நடிகை ரிச்சா சதா போன்றவர்கள் இதனை கண்டித்தனர்

Also read... "நாங்க Tom & Jerry": சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட ரக்‌ஷன்!

இந்நிலையில், ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இயங்கும் புலம்பெயர் வனவிலங்குகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரன்தீப் ஹூடா நீக்கப்பட்டுள்ளார். இந்த தூதர் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: