• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கஜா புயல் பாதிப்பு: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி!

கஜா புயல் பாதிப்பு: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி!

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( சார்ஜிங் டார்ச்லைட், தென்னை - பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

    அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

    நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

    தற்போது நடிகர் ரஜினிகாந்த் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதை அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் படிக்க : புயல் பாதிப்பு: ரசிகர்களின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் - விஜய் செய்த உதவி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: