ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார்? வெளியான தகவல்

ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார்? வெளியான தகவல்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேலும் ஒரு கொரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பரிசோதனை முடிவினைப் பொறுத்து நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13-ம் தேதி சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த் 14-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பில் பங்குபெற இருப்பதாகவும் டிசம்பர் 29-ம் தேதி சென்னை வந்து அரசியல் கட்சி தொடங்கும் தேதியை வெளியிட திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த், ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published:

சிறந்த கதைகள்