’1999ம் ஆண்டு ரஜினிகாந்த் என்னை தந்தையாக தத்தெடுத்த நாள் மறக்க முடியாதது’ - பாலம் கல்யாண சுந்தரம் நெகிழ்ச்சி

ரஜினியைச் சந்திக்க வந்த பாலம் கல்யாணசுந்தரம்.

1999ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் என்னை தந்தையாக தத்தெடுத்த நாள் மறக்க முடியாதது என்று பாலம் கல்யாண சுந்தரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துகளை ஏழை மக்களுக்கு எழுதிக் கொடுத்தவர் என்பது பலரும் அறிந்த செய்தி. இதை தெரிந்துகொண்டு அவரை தன் தந்தையாக தந்தெடுத்தவர்  ரஜினிகாந்த் என்பது இன்று அவ்வளவு அறியப்பட்ட விஷயமாக இல்லை. 1999ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களின் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்பொழுது இதுபோன்ற ஒரு மனிதரைப் பார்ப்பதே கடினமான ஒன்று எனக் கூறிய அவர், தான் வாழும்போதே தன் சொத்துகளை எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார். மேலும் கூறுகையில், எனக்கு 2 மகள்கள் உள்ளனர், தந்தை இல்லை. எனவே, நீங்கள் எனக்குத் தந்தையாக என்னோடு இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினிகாந்த்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20க்கு மேற்பட்ட நபர்களைச் சந்திக்கும் பாலம் கல்யாணசுந்தரம். போயஸ் கார்டன் இல்லத்தில் ராஜாவைப் போல பல வசதிகள் பெற்று இருந்தாலும் சிறையில் இருப்பதைப் போல உணர்ந்தாக நம்மிடம் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

Also read: ரஜினிகாந்த்துக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

அவர் மேலும் நம்மிடம் கூறுகையில், பொது மக்களுக்கு உதவிசெய்ய என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. குறிப்பாக என்னைப் பார்க்க வரும் நபர்கள் ரஜினியைத்தான் பார்க்க வருகிறார்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு அனுமதி கிடைக்காத சூழல் ஏற்பட்டது. அது ரஜினிகாந்த்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் கருதப்பட்டது. இதனால் ஒரு வருடம் கழித்து அவருடைய வீட்டிலிருந்து நான் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டேன் என்றார்.

எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம் என்றும் 24 மணி நேரமும் உங்களுக்காக என் வீட்டின் கதவு திறந்திருக்கும் என்றும் ரஜினிகாந்த் அவரை வழியனுப்பி வைத்தாராம். பாலம் கல்யாண சுந்தரம் மேலும் கூறுகையில், ரஜினிகாந்த் வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக இருந்தேன். என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். என்றாலும், மக்களைச் சந்திக்க முடியாது. என் சமூக சேவைக்கு அது தடையாக இருந்தது.

ரஜினிகாந்த் நல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார். நான் பொதுவானவன் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரிமும் அன்பை வளர்க்கும் எண்ணத்தோடு இருந்து வருகிறேன் எனக் கூறினார்.

ரஜினிகாந்த் 70வது பிறந்த பிறந்தநாளையொட்டி அவரைச் சந்திக்க வந்த பாலம் கல்யாணசுந்தரம், அவர் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு புறப்பட்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: