முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விமானத்தில் கேக் வெட்டிய ரஜினிகாந்த் (வீடியோ)

விமானத்தில் கேக் வெட்டிய ரஜினிகாந்த் (வீடியோ)

விமானத்தில் கேக் வெட்டிய ரஜினிகாந்த்

விமானத்தில் கேக் வெட்டிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்லும் வழியில் விமான பணியாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதைத்தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் பயணிப்பதற்காக காரிலிருந்து இறங்கும் ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகின. அண்ணாத்த படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிகிறது. படப்பிடிப்புக்கு இடையே டிசம்பர் 31ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பதற்காக சென்னைக்கு ரஜினி வந்துவிட்டு செல்வார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்லும் வழியில் விமான பணியாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இப்ப இல்லன்னா.. எப்பவும் இல்ல. என்று பொருள் குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

கேக் வெட்டும் ரஜினிகாந்த்

இந்தப் புகைப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Cake, Flight, Happy BirthDay, Rajinikanth