நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிய ரசிகர்கள்

ரஜினி மக்கள் மன்ற கொடியேற்றத்தின்போது..

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கியுள்ளனர்.

  • Share this:
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் மன்றக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளையும், புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 71-வது பிறந்தநாள் விழாவை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்ற நாகை மாவட்ட இணைச் செயலாளர் சுதந்திர வீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    அந்நிகழ்ச்சியில், சேத்திரபாலபுரம் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்ற கொடியை மாவட்டச் செயலாளர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு தென்னங்கன்றுகளையும், புரெவி புயல் மழையால் வீடிழந்து பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்கள் 10 பேருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: