• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Rajinikanth: ‘தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..!

Rajinikanth: ‘தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..!

நடிகர் ரஜினி

நடிகர் ரஜினி

அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Share this:
    மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார்.

    சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, ரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார்.

    அங்கு புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், மகள் ஐஸ்வர்யாவுடன் சாலையில் நடந்து செல்வது, ரசிகர்களை சந்தித்தது உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

    அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைவா.. தெய்வமே என அவரின் ரசிகர்கள் கோஷமிட்டனர். ரஜினியை நேரில் கண்ட சில ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களை கும்பிட்டு வணக்கம் செலுத்தினார். பின்னர் காரில் அவர் புறப்பட்டு சென்றார்.



    ரஜினி ரசிகர்களின் வருகையால் சென்னை விமான நிலையம் அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது.

    Also Read:  தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

    சென்னை நகரிலும் ரஜினி ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தலைவர் இஸ் பேக் என உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, ‘அண்ணாத்த’ டப்பிங் பணிகளில் ரஜினி கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு நடிகைகள் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: