கேரள வெள்ளம்: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குகிறார் நடிகர் லாரன்ஸ்

கேரள வெள்ளம்: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குகிறார் நடிகர் லாரன்ஸ்
  • News18
  • Last Updated: August 23, 2018, 11:06 AM IST
  • Share this:
கேரள வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவுக்கு பல்வேறு உலக நாடுகள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரும்  தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலர் நிவாரண நிதி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தற்போது நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடியை நிவாரண நிதியாக கேரளாவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


First published: August 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading