Home /News /entertainment /

நடிகர் ரஜினிகாந்த் உடன் ராதாரவி திடீர் சந்திப்பு...!

நடிகர் ரஜினிகாந்த் உடன் ராதாரவி திடீர் சந்திப்பு...!

குடும்பத்தினருடன் ரஜினியை சந்தித்த ராதாரவி

குடும்பத்தினருடன் ரஜினியை சந்தித்த ராதாரவி

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி தனது குடும்பத்தாருடன் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் தங்கி வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 5-ம் தேதி சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டிய அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜினிகாந்தை சந்தித்து போராட்டம் குறித்தும், மக்களின் மனநிலை குறித்தும் விளக்கியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்கும் ரஜினிகாந்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் ரஜினிகாந்த் உடன் ஆலோசனை நடத்திய ராதாரவி, தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

திமுகவிலிருந்து அதிமுக பின்னர் பாஜக என பிசியாக இருக்கும் ராதாரவி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை பல அரசியல் மேடைகளில் முழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Published by:Sankar
First published:

Tags: Actor Radharavi, Rajinikanth

அடுத்த செய்தி