ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியா இந்து நாடாக வாக்களியுங்கள்... ராதாரவி பரபரப்பு பேச்சு!

இந்தியா இந்து நாடாக வாக்களியுங்கள்... ராதாரவி பரபரப்பு பேச்சு!

ராதாரவி

ராதாரவி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பா.ஜ.க மூலமாக தேசியத்தைச் சுவாசிக்க வந்திருக்கிறேன். பா.ஜ.க தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன? பா.ஜ,க இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றியதன் பின்னரே இந்தியாவின் முழுமையான வரைபடம் வெளியாகி உள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து படித்துப் பார்த்தால் தெரியும். ஆனால் அவர் புரட்டிப் பார்த்தால் எப்படி தெரியும். அவர் நடிகரும் இல்லை. அரசியல்வாதியும் இல்லை.

என்னைத் தொடர்ந்து பல நடிகர்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளனர். நடிகர் கார்த்திக்கிடம் பா.ஜ.கவில் இணைவது குறித்து பேசியிருக்கிறேன். தி.மு.கவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நான் நயன்தாராவைப் பற்றி பேசியதற்காக என்னை தூக்கி விட்டார்களாம்.

இந்தக் கூட்டத்தில் உணர்வாளர்கள் நிரம்பியிருக்கின்றனர். எங்கிருந்தாலும் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள். இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள்” என்றார்.

மேலும் படிக்க: கொரோனா வந்திருச்சு... ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி மன்னிப்புக் கேட்ட நடிகை

First published:

Tags: Radharavi