Home /News /entertainment /

Radharavi: அமைச்சர் சொன்னாரா என் பேரை போடக் கூடாதுன்னு? - குமுறிய ராதாரவி

Radharavi: அமைச்சர் சொன்னாரா என் பேரை போடக் கூடாதுன்னு? - குமுறிய ராதாரவி

நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி

பெஃப்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் வைத்திருந்த பேனரில் தனது பெயர் இடம்பெறாததைப் பார்த்த ராதாரவி என் பெயரை அமைச்சர் போடக்கூடாதென்று சொன்னாரா எனக் கேட்டு குமுறினார்.

பெஃப்சி என்றழைக்கப்படும்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 2021-2023ம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ சமீபத்தில் நடைபெற்றது. இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச்செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகினர்.

இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் தற்போது பாஜகவில் இருக்கும் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். 10 மணி நிகழ்ச்சிக்கு 9.30 மணிக்கே வந்த அவர் மேடையில் இருந்த பேனரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பல சங்க நிர்வாகிகளின் பெயருக்கு இடையே தன்னுடைய பெயர் இல்லை என்று தனது கோபத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.



பின்னர் பெஃப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து, ஏன் என் பெயரை பேனரில் போடவில்லை எனக் கேட்டார். அவர் சங்கடத்தில் நெளிய, குஷ்பு பெயரை எல்லாம் போட்டுருக்கீங்க, பாக்யராஜ் பேர் எல்லாம் இருக்கு. என் பேரை மட்டும் ஏன் போடல என்றார். ஆர்.கே. செல்வமணி பதில் பேசாமல் நின்றிருந்தார்.

பின்னர் சட்டென அந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ என் பேரை போட வேணாம்னு சொன்னாரா எனக் கேட்க இந்த விவகாரம் அரசியலாவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த செல்வமணி, அதற்கு மட்டும் இல்லை என்று மறுத்தார்.

உடனே பொறுப்பேற்கவிருந்த நிர்வாகிகளுக்கு சால்வையை அணிவித்து, வாழ்த்து சொல்லிவிட்டு விழா தொடங்குவதற்கு முன்பாகவே கிளம்பினார் ராதாரவி. பின்னர் 11 மணி அளவில் ராதாரவி இல்லாமலேயே நிகழ்ச்சி நடைபெற்றது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Radharavi, Kollywood

அடுத்த செய்தி